செவ்வாய், 30 செப்டம்பர், 2008

சைவ சித்தாந்தம்


இவ்வுலகில் அனுபவிக்கப்படும் இன்ப துன்பங்களுக்கு காரணம் நாம் செய்யும் முயற்சி அல்ல . நல்ல செயல்கள் மற்றும் தீய செயல்கள் ஆகிய இரு வினைகளுமே ஆகும் .

வினையின் பயனை எல்லா உயிர்களும் அனுபவித்தே ஆக வேண்டும் .வினையின் தாக்கத்தை திருவருளால் குறைக்க முடியுமே ஒழிய நீக்க முடியாது .

திருக்குறளில் சைவ சித்தாந்தம்

சிவபெருமானின் எண்(எட்டு ) குணங்கள் :

முதன்மை , தூய அறிவுடைமை ,உயிர்களில் கலந்திருத்தல் ,வேண்டுதல் வேண்டாமை இல்லாதிருத்தல் , இருவினை இல்லாமை ,பொறிவாயில் மனம் செல்லாமை , தனக்கு ஒப்பின்மை மற்றும் அறமும் அந்தண்மையுமுடைமை.

இக்குணங்களை திருவள்ளுவர் ,திருக்குறளில் முதல் அதிகாரத்திலேயே சைவ சித்தாந்த கருத்துகளாக உணர்த்தி உள்ளார் .

வெள்ளி, 19 செப்டம்பர், 2008

நமசிவாய என்னும் மந்திரத்தை சொன்னால் உலகியல் இன்பம் மட்டுமே கிடைக்கும் .
சிவாயநம என்னும் மந்திரத்தை சொன்னால் உலகியல் இன்பத்தோடு முத்தி என்னும் வீடுபேறாகிய இறைவன் திருவடியை அடையலாம்.

செவ்வாய், 9 செப்டம்பர், 2008

சைவ சித்தாந்தம்

சிவாயநம என்னும் அஞ்செழுத்து மந்திரத்தின் விளக்கம்

சி - சிவம்
வா - சத்தி
- உயிர்
- மறைப்பாற்றல்
- ஆணவமலம்






சைவ சித்தாந்தம்

சைவ சித்தாந்த அடிப்படைக் கருத்துக்கள்


இறைவன் உயிர்களை படைக்கவில்லை .

இறைவன் நமக்கு வழங்கி உள்ளது உடல் மட்டுமே

உயிர்கள் கடவுளாக முடியாது

கடவுள் என்பது வேறு தெய்வம் என்பது வேறு

பிறப்பு இறப்புக்கு உட்படாதது கடவுள் ; பிறப்பு இறப்புக்கு உட்பட்டவை தெய்வம்

ராமர், கிருஷ்ணர் போன்றவர்கள் தெய்வம்

சிவபெருமான் மட்டுமே கடவுள்